இயக்குனர் பொன்ராம் பேட்டி | Director Ponram exclusive interview #Exclusive

2018-04-04 1,851

An exclusive interview with Director Ponram is here. Ponram shares about, his friendship with rajesh, Reason for Hat-trick combo, etc.,

சிவகார்த்திகேயன், சமந்தா நடிக்க தனது மூன்றாவது படமான 'சீமராஜா' -வை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' என மூன்று படங்களுமே பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி - டி.இமான் காம்போவில் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பு.
நக்கல், நையாண்டி என எல்லா வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பொன்ராமிடம் 'சீமராஜா' படம் குறித்து கேட்டோம். அவரது ஸ்பெஷல் பேட்டி இங்கே...
"மூணாவது முறையா நாங்க சேர்ந்தது சந்தர்ப்ப சூழ்நிலையால் தான். ஒரே கோ-ஆர்டினேஷன்ல ஸ்க்ரிப்ட் அமையுறது.. நான் சொல்ற கான்செப்ட் அவருக்கு உடனே பிடிச்சுப்போறதுனு சில வொண்டர்ஸால மறுபடியும் முறையாக கூட்டணி அமைஞ்சிருக்கு. ரெண்டு முறை நாங்க பிளான் பண்ணி பண்ணினோம். மூணாவது முறை தானாகவே அமைஞ்சது. திரும்ப ஒருவாட்டி நாம சேர்ந்து பண்ணிடலாமே அப்படினு திடீர்னு எடுத்த முடிவு இது."